வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (14:14 IST)

நெவர் கிவ் அப்… அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ட்விட்டரில் தன்னுடைய பயோவில் “அஜித் 62 இயக்குனர்” என்ற டேக்கை நீக்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது தன்னுடைய ப்ரொபைல் புகைப்படமாக அஜித் புகைப்படத்தை வைத்திருந்ததையும் நீக்கியுள்ளார்.