1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (08:14 IST)

தல பிறந்தநாள்னா சும்மாவா!தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள் - மில்லியனை கடந்த #HBDDearestThalaAJITH

ஊரடங்கு அமலில் இருப்பதால் நடிகர் அஜித் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட இயலாததால் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ஆண்டுதோறும் மே 1 நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அஜித் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்லாமல், ரத்ததான முகாம், அன்னதானம் போன்ற நற்பணிகளையும் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த முறை ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக யாரும் ஊரடங்கை மீறி கூட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் வேறு விதமாக அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். தற்போது 5.22 மில்லியன் பதிவுகளை கடந்து உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது அஜித்தின் பிறந்தநாள் ஹேஷ்டேக்.