புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated: வியாழன், 30 ஏப்ரல் 2020 (15:03 IST)

சும்மா சும்மா கேட்டுகிட்டு இருக்காதீங்க... கொரோனா முடியும்வரை அப்டேட் இல்ல - போனி கபூர் அறிக்கை!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொரோனா வைரஸ் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்துவருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்துள்ள இப்படம் வருகிற 2021ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை தான் தயாரிக்கும் எந்த படம் குறித்த அப்டேட்டும் வராது" என்று தெரிவித்துள்ளார்.எனவே வலிமை குறித்த அப்டேட்களும் கொரோனா முடிந்தால் தான் வரும் என்பது உறுதியாகிவிட்டது. இதனை கண்ட அஜித் ரசிகர்கள்,  யோவ்... தல பொறந்தநாளுக்கு ஆச்சும் எதா பார்த்து செய்யலாம்ல என வருத்தத்தில் கமென்ஸ்ட் செய்து வருகின்றனர்.