செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (10:48 IST)

#GetWellSoonTHALA: அஜித்துக்காக பிராத்திக்கும் ரசிகர்கள்!!

வலிமை படபிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விரைவில் குணமாக அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். 
 
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடித்து வரும் படம் வலிமை. இந்நிலையில் சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
பைக் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது நிலைதடுமாறிய அஜித் கீழே விழுந்ததால் தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த காயத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் இருப்பினும் அஜித் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றனர். 
 
எனவே அஜித் ரசிகர்கள் அவர் விரைவில் குண்மாக வேண்டும் என எண்ணி வரும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் #GetWellSoonTHALA என்ர ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். தற்போது இந்த ஹேஷ்டேக் தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.