சாந்தனு நடித்த ’முருங்கைக்காய் சிப்ஸ்’: இன்று முதல் டிரைலர்

santhanu
சாந்தனு நடித்த ’முருங்கைக்காய் சிப்ஸ்’: இன்று முதல் டிரைலர்
siva| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (06:52 IST)
கே பாக்யராஜ் மகன் சாந்தனு தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று 04.32 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் மாஸ்டர் படத்தை அடுத்து சாந்தனுவுக்கு வெளியாக உள்ளது என்பதல் இந்த திரைப் படம் அவருக்கு வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தரண் குமார் இசையில் ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவில், ஜொமெய்ன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :