செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (13:03 IST)

பல ‘புலி’களோட நடிச்ச என்ன ‘எலி’யோட நடிக்க வைச்சுருக்காங்க- எஸ்.ஜே.சூர்யா

‘ஒரு நாள் கூத்து’  படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், எஸ்.ஜே.சூர்யாவை மற்றும்  ப்ரியா பவானி ஷங்கரை வைத்து புதிய படத்தை இயக்கி வந்தார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இன்று (அக்.23) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா ஒரு எலியைப் பார்ப்பது போல உள்ளது.

’மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஜே.சூர்யா., “ பல ‘புலி’களோட நடிச்ச என்ன ‘எலி’யோட நடிக்க வைச்சுருக்காங்க. ஆனால், உங்களுக்கு தெரியுமா இந்த ‘எலி’ தான் எதிர்காலத்தில் என்னை ஒரு ‘புலி’யா ஆக்கப் போகுது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில்” என்று தெரிவித்திருக்கிறார்.