செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (12:04 IST)

நாங்களும் ஆட்டோல போவோம்: கஸ்தூரி அதிரடி டுவீட்

நடிகை கஸ்தூரி தான் ஆட்டோவில் சென்ற புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனின் ஆசையை நிறைவேற்ற ஆட்டோவில் பயணம் செய்தார். ரஜினி ஆட்டோவில் வருவதைப் பார்த்த ரசிகர்கள் பலர் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பேரனுக்காக ரஜினி ஆட்டோவில் சென்றது வைரலாகியது.
 
இந்நிலையில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, நாங்களும் ஆட்டோவில் போவோம் என தான் ஆட்டோவில் சென்ற புகைப்படத்தை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ரஜினி ஆட்டோவில் சென்ற அன்றே கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் என்ன தான் ரஜினி தமிழகத்திற்கு தலைவர் என்றாலும் தன் செல்லப்பேரனுக்கு அவர் தாத்தா என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.