திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (12:33 IST)

ராட்சசன் வெற்றியை அப்போவே கணித்த தோனி பட இயக்குநர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம்  பிரமாண்ட இயக்குனர் சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
முண்டாசுப்பட்டி வெற்றி திரைப்படத்தை இயக்கிய ராம்குமார், முழுவதும் மாறுபட்ட ஒரு களத்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கியது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய கரணம். சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்து வருகிறது. 
 
தொடர்ந்து ராட்சசனை பார்த்த பல பிரபலங்கள் அவர்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது எம்.எஸ்.தோனி என்ற பிரபல பாலிவுட் திரைப்படத்தின் இயக்குநர், நீரஜ் பாண்டே ராட்சசன் திரைப்படத்தைப் பற்றி முன்னதாகவே கூறியதை நாயகன் விஷ்ணு சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 
 
அதாவது, அவர் ஒரு சிறந்த ஜட்ஜ், இத்திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என முன்பே கணித்திருந்தார். என்னுடைய நடிப்பு மிகவும் சின்ஸியராக இருக்கிறது என அவர் பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது என நடிகர் விஷ்ணு அவரது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.