திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2017 (13:06 IST)

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்: எதுக்கு!!

கமெடியனாக தனது பயணத்தை துவங்கிய சந்தானம் அடுத்து ஜோரோவாகி அதோடு தயாரிப்பாளராவும் உருவெடுத்தார். அடுத்து இயக்குனராகவும் உள்ளாராம்.


 
 
முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சந்தானத்தின் காமெடி இல்லாமல் இருக்காது என்பது ஒரு காலத்தில் இருந்த பேச்சு. ஆனால், தற்போது காமெடி பக்கம் தலைகாட்ட தயங்குகிறார் ஹீரோ சந்தானம்.
 
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கினார்.
 
அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. இதனால் ஹீரோ வாய்ப்பையும் இழந்து காமெடியன் வாய்பையும் இழந்து தவித்து வருகிறார்.
 
தற்போது சர்வர் சுந்தரம் ரிலீஸூக்காக காத்து கொண்டிருக்கிறார் சந்தானம். இதை தொடர்ந்து சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்கள் வரிசையாக கிடப்பில் உள்ளன.
 
இந்நிலையில் சந்தானம் இது குறித்து கூறியதாவது, அடுத்து உங்களது எதிர்காலம் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். வருங்காலங்களில் என்னை ஒரு இயக்குனராக பார்க்கலாம் என கூறியுள்ளார்.