அவெஞ்சர்ஸால் ரொம்ப கஷ்டப்பட்டேன் – மனம் திறந்த சந்தானம்

santhanam
Last Modified புதன், 24 ஜூலை 2019 (14:03 IST)
சந்தானம் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “ஏ1”. இந்த படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது.

நாளைய இயக்குனரில் குறும்படங்கள் இயக்கிய ஜான்சன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து நடிகர் சந்தானம் “இயக்குனர் ஜான்சன் வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர். அங்கே உள்ள கதைகளைதான் படமாக்கி உள்ளார். இந்த படம் சூது கவ்வும் மாதிரி காமெடி எண்டெர்டெய்னர் படமாக இருக்கும்.

படத்தை எடுத்து முடித்த பிறகும் வெளியிட ரொம்ப கஷ்டப்பட்டோம். அவெஞ்சர்ஸ் வருகிறது, ஐபிஎல் வருகிறது என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. இப்போது படம் வெளியாக இருக்கிறது. எல்லாரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை தடை செய்யக்கோரியும், சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பிராமண சமூகத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :