"எரியுதா மூஞ்சில போட்டு பாரு தெரியும்" - சாண்டியிடம் எகிறிய மதுமிதா!

Last Modified புதன், 24 ஜூலை 2019 (13:21 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ  இணையத்தில் வெளிவந்தது, இதில் சாண்டியிடம் மதுமிதா நேரடியாக சண்டையிடுகிறார்.


 
கடந்த இரண்டு நாட்களாக கிராமத்து  கெட்டப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வித்யாசமான டாஸ்க்களை செய்து வருகின்றனர். இதனால் பிக்பாஸ் சற்று சலிப்பு தட்டாமல் செல்கிறது. தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் பாத்ரூம் சொல்லவேண்டுமென்றால் கொடுக்கிற டாஸ்க்கை செய்துவிட்டுத்தான் போகவேண்டும். 
 
அதற்காக சாண்டி சில்லி பேஸ்ட்டை  ( chili past ) மதுமிதாவின் முகத்தில் தடவிவிட்டு " மாரியம்மா மாரியம்மா" என பாட்டு பாட அதற்கு அவரை டான்ஸ் ஆட சொல்கிறார். ஆனால் நன்றாக டான்ஸ் ஆடிய மதுமிதாவை வேண்டுமென்றே அது டிஸ்க்கோ டான்ஸ் மாதிரி இருக்கு நல்லா ஆடு என்று நக்கலடிக்கிறார். இதனால் கடுப்பான மதுமிதா "நீ சீக்கிரம் பாடு எரியுதுல்ல என கத்துகிறார். ஆனாலும், சாண்டி ஓ எரியுதா என கூறி கிண்டலடித்து சிரிக்கிறார். இதனால் கடுப்பான மதுமிதா உன் மூஞ்சில போட்டுப்பாரு தெரியும் என் கோபத்துடன் கூறிவிட்டு பாத்ரூமிற்குள் செல்கிறார். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் சாண்டி ஃபன் பண்றேன்னு அடுத்தவர்களை கஷ்டபடுத்தி அதில் சந்தோஷப்படுகிறார். இதனால் அவர் ரசிகர்களிடம் நிறைய வெறுப்பை சம்பாதிக்க போகிறார் என கூறி வருவதோடு மதுமிதாவுக்கு பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :