1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (12:42 IST)

மறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்!

மறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்!
மறைந்த நடிகர் சேதுராமன் சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் எதிர்பாராத வகையில் மாரடைப்பில் காலமானார் என்பது தெரிந்ததே. அவருடைய மறைவு அவரது நெருங்கிய நண்பரான சந்தானத்தை மிகவும் பாதிப்படைந்தது
 
அவ்வப்போது சேதுராமனின் வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு இருக்கும் சந்தானம் தற்போது சேதுராமன் கட்டிய மருத்துவமனையை திறந்து வைத்து தனது நட்பின் அடையாளத்தை நிரூபித்துள்ளார் 
 
சேதுராமன் இருக்கும் போது ஈசிஆர் சாலையில்  மருத்துவமனை ஒன்றை கட்டி வந்ததாகக் கூறப்பட்டது. அந்த மருத்துவமனையின் பணிகள் தற்போது முடிவுக்கு வந்து தற்போது திறப்பு விழா கண்டுள்ளது 
 
இந்த மருத்துவமனையை தனது நண்பருக்காக நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது