அமெரிக்க மருத்துவமனைகளுக்கு டார்கெட்; உஷாரா இருங்க! – வலைவிரிக்கும் சைபர் குற்றவாளிகள்!
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகள் மீது சைபர் தாக்குதல் நடைபெறுவதாகவும், இதனால் தகவல்கள் திருடப்படுவதுடன், மருத்துவ சேவையும் பாதிக்கப்படுவதாக உளவுத்துறை கூறியுள்ளது.
இந்த திடீர் சைபர் தாக்குதல் அமெரிக்க அதிபர் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவு அமைப்பு மற்றும் சிபிஐ ஆகியவை மருத்துவமனைகளை எச்சரித்துள்ளன.