ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (11:48 IST)

டிடி ரிட்டர்ன்ஸ் ஹிட்… ரிலீஸுக்கு தயாராகும் சந்தானத்தின் அடுத்த படம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸ் ஆன சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பெரியளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இந்த வசூல் தொடரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வெற்றியால் சந்தானத்தின் அடுத்தடுத்த படங்கள் உடனடியாக ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே முடிந்தாலும் ரிலீஸாகாமல் இருந்த சந்தானத்தின் கிக் படம் இப்போது ஆகஸ்ட் இறுதியில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இந்த திரைப்படம் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது. கன்னடத்தில் லவ்குரு', 'கானா பஜானா' , 'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் கிக் படத்தை இயக்கியுள்ளார். தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்துள்ளார்.