''பீட்சா'' பாகம் 4 படம்? தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு
பீட்சா பாகம் 4 படம் பற்றி தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் பீட்சா. இப்படத்தில், விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன், பாபி சிம்ஹா, பூஜா ராமச்சந்திரன், வீர சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதன்பின்னர். பீட்சா 2 வது பாகம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில்,மோகன் கோவிந்த் இயக்கத்தில், அஷ்வின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீட்சா 3 படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், பீட்சா திரைப்படங்களின் வரிசையில் 4 வது பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.