வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:28 IST)

டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றி… சம்பளத்தை ஏற்றிய சந்தானம்!

சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இந்த வசூல் தொடரும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியால் சந்தானம் தன்னுடைய சம்பளத்தை 5 கோடியில் இருந்து 8 கோடியாக ஏற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீழ்ச்சிப் பாதையில் சென்ற அவரின் மார்க்கெட்டை இந்த படம் தூக்கி நிறுத்தியுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.