புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:19 IST)

க பெ ரணசிங்கத்துக்குப் பின் சந்தானத்தின் பிஸ்கோத் – ஜி ப்ளக்ஸில் ரிலீஸ்!

சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் திரைப்படம் ஜி பிளக்ஸ் ஓடிடியில் ரிலிஸாக உள்ளது.

நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா மற்றும் பிஸ்கோத் ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘பிஸ்கோத்’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை இப்போது ஜி ப்ளக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. க பெ ரணசிங்கம் படத்தை பே பெர் வியு திட்டத்தில் ரிலிஸ் செய்ய உள்ளதாம். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.