செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (16:20 IST)

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கும் சந்தானம் பட இயக்குனர்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளதால் அடுத்த ஆண்டு இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இருவர் தனித்தனியாக இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’ படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் யோகி தான் அவரது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
கார்த்திக் யோகி கூறிய கதை சிவகார்த்திகேயனை கவர்ந்து விட்டதாகவும் எனவே இந்த படத்தின் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை கேஜிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது