திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (19:09 IST)

விஜய் நண்பனுக்கா இப்படி நடக்கணும்? சஞ்சீவிற்கு ஏற்பட்ட சோகம்!

பிரபல தொலைக்காட்சி நடிகரும், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
சென்னை லயோலா கல்லூரியில் விஜய் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் ஒன்றாக படித்தவர்கள். எனவே இருவரும் இன்றுவரை சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் சஞ்சீவ் மெட்டிஒலி, ஆனந்தம், கஸ்தூரி, திருமதி செல்வம், ரேகா ஐபிஎஸ் உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் ஒரு சிலர் விஜய் நடித்த ஒரு சில படங்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சஞ்சீவ் ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவன தயாரிப்பில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருந்தார். இந்த பூஜைகள் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு துவங்கிய நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் திடீரென விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம் யார் காரணம் என்பது தெரியவில்லை.