வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (12:08 IST)

மயங்கி விழுந்துட்டாங்க... ஏர்போர்ட்டில் சண்டையிட்ட சஞ்சீவ் ஆல்யா - வீடியோ!

சஞ்சீவ்  ஆல்யா ஜோடி சென்னை விமான நிலையத்தில் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
பிரபல சீரியல் ஜோடியான ஆல்யா சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களுக்கு பரீட்சியமானார்கள். 
 
இருவரும் பின்னர் காதலித்தது திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகன் மற்றும் மகளை பெற்றனர். 
 
தொடர்ந்து நடித்து வரும் அவர்கள் வெளியூருக்கு செல்ல ஒரு பிரபல நிறுவனம் நடத்தும் விமானத்தில் டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால், 9 மணி நேரம் தாமதமாகியும் அந்த விமானம்  வரவில்லை. 
இதனால் அங்கிருந்த குழந்தைகள் , பெரியவர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் பெரும் அவதிப்பட்டுள்ளனர். கர்ப்பிணி ஒருவர் மயங்கி விழுவிட்டார். 
 
இதையடுத்து கோபப்பட்டு சஞ்சீவ் அங்கிருந்த சக பயணிகளுடன் சேர்ந்து ஊழியருடம் வாக்குவாதம் செய்து இனி இந்த விமானத்தில் செல்லவேண்டாம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ: