1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (16:20 IST)

'தளபதி 67’ படத்தில் இணைந்த பிரபல நடிகர், நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

thalapathi 67
தளபதி விஜய்  நடித்து வரும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளதை அடுத்து இன்று தனி விமான மூலம் பட குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். 
 
இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நேற்றைய அறிவிப்பில் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு இருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் சஞ்சய்தத் நடிக்க இருப்பதாகவும் இதனை அடுத்து ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றார்கள் என்பது குறித்த தகவலை அடுத்தடுத்து பட குழுவினர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது 
 
Edited by Mahendran