செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:20 IST)

மீண்டும் நடிகையாகிறார் டென்னிஸ் வீரர் சானியா மிர்சா: பரபரப்பு தகவல்

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடரில் அவரே தனது கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு  வெப்தொடரில் நடிக்க சானியா மிர்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த தொடரில் நடிக்க சானியா மிர்சா சம்பளமே வாங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்து சானியா மிர்சா கூறியபோது ’இந்தியாவில் தீராத நோய்களில் ஒன்றாக இருக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வு குறித்த வெப்தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் இந்த நோய் குறித்த தவறான கருத்துக்களை மாற்றுவது தான் எனது நோக்கம் 
 
இந்த தொடரால் மக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வை வேண்டும் என்பதற்காக சானியா மிர்சா சம்பளம் வாங்காமல் நடிப்பதாக படக்குழுவினர் கூறிவருகின்றனர். 5 எபிசோடுகள் ஆக உருவாகும் இந்த தொடர் இம்மாத இறுதியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது