செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (17:43 IST)

தனுஷின் ‘அசுரன்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது. ஆனால் எதிர்பாராத சில காரணத்தால் அந்த படம் மீண்டும் தள்ளிப்போனது. இதனால் தனது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததை சமூக வலைத்தளங்களில் இருந்து புரிந்து கொண்ட தனுஷ், உடனே தனது அடுத்த படமான ‘அசுரன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவித்தார்
 
இதன்படி ‘அசுரன்’ திரைப்படத்தின் டிரைலர் செப்டம்பர் 8ஆம் தேதி ஞாயிறு அன்று வெளியாகவிருப்பதாக தனது டுவிட்டரில் தனுஷ் அறிவித்துள்ளார். இதனால் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் ஆகாததால் சோர்ந்து போயிருந்த தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகமாகியுள்ளனர்.
 
வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா,  பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இந்த நிலையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பிரச்சனை முடிந்துவிட்டதாகவும் இந்த படம் அடுத்த வாரம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது