மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்! என்னடா நடக்குது இங்கே!

Last Modified புதன், 24 ஜூலை 2019 (09:16 IST)
பிக்பாஸ் வீட்டின் முத்த மன்னன், கட்டிப்பிடி மன்னன் மோகன் வைத்யா வெளியேறிய பின்னர்தான் அந்த வீட்டின் பெண்கள் கொஞ்சம் நிம்மதியாக உள்ளனர். இல்லையெனில் திடீர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அவர் ஒரு வழக்கமாக வைத்திருப்பார்.
இந்த நிலையில் இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சேரன், சாண்டியை தவிர மற்ற அனைவரும் செயற்கையாக நடிப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துள்ளது

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் வழக்கம்போல் மீராவுடன் ஒருவர் மோதுகிறார். இன்று அவருடன் மோதுவது மதுமிதா என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக இருந்த இடம் தெரியாமல் இருந்த மதுமிதா இன்று அவருக்கு நாட்டாமை கேரக்டர் கொடுத்தவுடன் எகிறி துள்ளுகிறார். நாட்டாமை கன்னத்தில் முத்தம் கொடுத்தால் சாப்பிடலாம் என ஒரு கண்டிஷன் போட உடனே அபிராமி மதுமிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு சாப்பிட செல்கிறார். இதனையடுத்து சரவணனும் மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க வருவதால் பரபரப்பு ஏற்படுகிறது. இந்த வீடியோவின் கமெண்ட்டில் 'என்னடா நடக்குது பிக்பாஸ் வீட்டில்' என்று ஒருசிலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :