நான் சாமி இல்ல, பூதம் - தெறிக்கவிடும் சாமி ஸ்கொயர் டிரைலர்
ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான `சாமி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். `சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சாமி ஸ்கொயர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்த இந்த டிரைலரில், விக்ரமின் நான் தாய் வயத்தில பொறக்கல... பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல பூதம் என்ற ஆக்ரோஷமான வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.