1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 3 ஜூன் 2018 (10:58 IST)

சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான `சாமி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். `சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
 
சாமி ஸ்கொயர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
மேலும் படத்தின் டிரைலரும் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்குள் தூத்துக்குடி கலவரம் நடைபெற்றதால், டிரைலர் ரிலீஸ் டேட் தள்ளிவைக்கப்பட்டது.
 
இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று காலை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை எதிர்நோக்கி பல ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.