1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (16:42 IST)

மீண்டும் தொடங்கப்படும் சமுத்திரக்கனியின் அப்பா 2!

விநோதய சித்தம் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கியுள்ள படம்தான் விநோயத சித்தம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ஆயுத பூஜைக்கு ரிலிஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சமுத்திரக்கனி தான் ஏற்கனவே இயக்கிய அப்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.