சில பேர் என்னை அடிக்கிறார்கள்.. ஆனால் - டிராகன் நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேச்சு!
விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய நடிகர் ப்ரதீப் “சில பேர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள்.
அவர்கள் யார், எதற்கு அடிக்கிறார்கள் என்று அதற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஒரு செடி வளரும் அதை மிதித்துவிட்டு சில பேர் செல்வார்கள். ஆனால் அப்போதெல்லாம் அதன் வேர் உள்ளே வளர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்த நேரத்தில் அந்த வலியை எல்லாம் அந்த செடி தாங்கிகொண்டால் அது பெரிய மரமாக வளர்வதை யாராலும் தடுக்க முடியாது” என சிம்ப்பதியை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார்.