1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (04:50 IST)

அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி ஆவேசம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனங்கள் முழுக்க முழுக்க பாசிட்டிவ் ஆக வெளிவந்து கொண்டிருக்கின்றது. பிரபாஸ், அனுஷ்காவின் உழைப்பு, ராஜமெளலியின் பிரமாண்டத்தை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. நல்ல படங்களை கூட குதர்க்கமாக விமர்சனம் செய்யும் ஊடகங்கள் கூட இந்த படத்தை பாராட்டி வருகின்றன.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி 'இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா' என்று தனது டுவிட்டரில் ஆவேசமாக கூறியுள்ளார்.