வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (21:58 IST)

சம்பளம் வாங்காம நடிச்ச படத்தை வாராவாரம் போட்டு சம்பாதிக்கிறாங்க! சமுத்திரக்கனி வேதனை

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் இயக்குனர் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது 'அடுத்த சாட்டை' என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது 
 
பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன் பிரபு திலக் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பி ராமையா,ஆகியோர்களுடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா, உள்பட பலர் நடித்துள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அடுத்த சட்டை இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, 'சாட்டை படத்தில் நன்றாக நடித்தோம். படம் ஹிட். ஆனால் படத்தில் நடித்த நானும்,  தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது' என்று வேதனையுடன் கூறினார். 'சாட்டை' படத்தை அடிக்கடி ஒளிபரப்பி சம்பாதிக்கும் டிவி எது என்பது அனைவரும் அறிந்ததே.
 
சென்னை ரூட் தலை விஷயத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்து , மாணவர்களை நல் வழிப்படுத்திய சென்னை அம்பத்தூர் போலீஸ்  டி.சி ஈஸ்வர், அடுத்த சாட்டை பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது