வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 மே 2024 (17:06 IST)

குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா? பற்றி எரியும் சோசியல் மீடியா! – உண்மை என்ன?

Samantha
பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. முன்னதாக தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவை திருமணம் செய்திருந்த சமந்தா சில வருடங்கள் முன்னதாக அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் சமந்தா, புஷ்பா படத்திலும் ஒரு க்ளாமர் பாடலில் டான்ஸ் ஆடியிருந்தார்.

சமீபத்தில் மயோசிடிஸ் என்ற நோயெதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அதில் இருந்து மெல்ல மீண்டுள்ளார். இதனால் அது முதலே அடிக்கடி அவர் தனது இன்ஸ்டாகிராமில் உடல்நலம் குறித்த தகவல்கள், ஆலோசனைகளை பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அப்படியாக சில மணி நேரங்கள் முன்னதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டவல் அணிந்த படி இன்ஃப்ராரெட் குளியலுக்காக அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இன்ஃப்ராரெட் குளியலால் ஏற்படும் நன்மைகள் குறித்து அவர் பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் சமூக வலைதளங்களில் சமந்தா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி படத்துடன் மற்றொரு நிர்வாணப்படமும் பகிரப்பட்டு அதுவும் சமந்தாவினுடையது என சிலர் பரப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவ்வாறான எந்த புகைப்படமும் சமந்தா தனது அக்கவுண்டில் பகிரவில்லை. கடந்த சில காலமாக நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த சமந்தா புகைப்பட விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samantha story


Edit by Prasanth.K