வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 5 மே 2024 (09:06 IST)

சீனுராமசாமியின் பதிவு தேவையற்றது.. கஸ்தூரி ட்விட்.. பதிலடி கொடுத்த இயக்குனர்..!

இளையராஜா, வைரமுத்து விவகாரம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டரில் ’உண்மையில் வைரமுத்து அவர்களை  வளர்த்தது இளையராஜா அவர்கள்தான் வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
 
சீனுராமசாமியின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி கூறியபோது, ‘திரு வைரமுத்துவுக்கு முன்னும் பின்னும் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்கு பாட்டெழுதி ஹிட்டடித்த பெரும் திறமைசாலிகளை எதற்கு குறைத்து பேச வேண்டும்? சீனுராமசாமியின் இந்த பதிவு  மிகவும் வருத்ததுக்குரியது . தேவையற்றது’ என்று கூறியிருந்தார்.
 
இந்த பதில் அளித்த சீனுராமசாமி, கவிஞர்கள் கவிதை வரிகளை எழுதி பாட்டில் பேர் வாங்கி விடக்கூடாதுன்னு கவனமா இருப்பாரு அதுக்கு காரணம் வைரமுத்து வளர்ச்சி அண்ணாவுக்கு பிடிக்கல கண்ணா" என்று நான் இயக்கி வரும் கோழிப் பண்ணை செல்லதுரை படத்தில் பாடல் எழுத வரும் போது #DummyLyric விசயத்தை சொன்னது திரு கங்கை அமரன் அவர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
 
Edited by Siva