வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 மே 2024 (11:17 IST)

மதம் மாறிய பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான்..! புதுப்பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக விளங்கி வரும் ஜிப்ரான் தான் மதம் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.



தமிழில் விமல் நடித்து 2011ல் வெளியான ‘வாகை சூட வா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். தொடர்ந்து வத்திக்குச்சி, உத்தமவில்லன், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள குரங்கு பெடல் படத்திற்கும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர்.

ஆனால் அந்த படத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜிப்ரான், தான் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த படத்திலிருந்து தனது தந்தையின் பெயரையும் தனது பெயருடன் சேர்த்து ஜிப்ரான் வைபோதா என்று வைத்துள்ளார். ஜிப்ரானின் தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா ஆகும்.

முன்னதாக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K