திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:36 IST)

நம் குழந்தை பருவத்துக்கே அழைத்து செல்லும்… கனவு லொகேஷனில் ஃபீல் செய்த சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த சமந்தா கடந்த ஆண்டு மையோசிட்டீஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறி குணமானார். இந்நிலையில் தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளாமல் சமந்தா ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று மையோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது வெளிநாட்டில் இருக்கும் சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் the sound of music என்ற ஹாலிவுட் படம் எடுக்கப்பட்ட லொகேஷனில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். அதில் “நான் சிறுமியாக இருக்கும் போது சந்தோஷமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் அடிக்கடி பார்க்கும் படம் the sound of music தான். அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு கனவுலகில் சென்றது போல இருக்கும். இப்போதும் அந்த படத்தை அடிக்கடி பார்க்கிறேன். இப்போதும் குழந்தை பருவத்துக்கே அழைத்து செல்கிறது. அந்த படம் எடுக்கப்பட்ட இடத்துக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணமாகும்.” என நெகிழ்ந்துள்ளார்.