செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (11:05 IST)

சல்மான் கான் படத்தில் சமந்தா?... தமிழ் இயக்குனரின் திட்டம்!

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. சமந்தா இப்போது சினிமாவுக்கு இடைவெளி விட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.