1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (17:42 IST)

விமர்னங்களால் கடுப்பான சமந்தா....நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது, ஷிவ் நிர்வானா என்பவர் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் கதை காஷ்மீரில் நடைபெறுவதாக உள்ளது என்பதால் காஷ்மீரில் தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில்,  நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிம் அவரைக் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தததால் தான் அவர் கணவைப் பிரிந்தார் என தெலுங்கு இணையதளங்கள் அவதூறு பரப்புவதாக நீதிமன்றம் சென்றார்.  பின்னர்,   விஜய் தேவரகொண்டாவின் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்ந்தா பபட பூஜையில் கலந்துகொள்ளாததற்கும் அவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது, காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததை ஒப்பிட்டு சமந்தாவை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில்,  எனது கருணையும் காலாவதி ஆகலாம்  எனத் தெரிவித்துள்ளார்.