வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (20:15 IST)

ஸ்ரீசாந்துக்கு இந்த வேடமா… காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் செம்ம அப்டேட்!

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர்.  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் அண்மையில் தடை நீக்கப்பட்டார். மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிப்பம் டப்பம் பாடலில் சமந்தாவுடன் ஸ்ரீசாந்தும் இடம்பெற்றுள்ளார். மேலும் அந்த பாடலில் இருவரும் காதலர்கள் போல சித்தரிக்கப்பட்டுள்ளனர்.