1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (15:20 IST)

அமீர்கான், ஆலியா பட் வரிசையில் இணைந்த சமந்தா… வைரலாகும் வீடியோ!

போன் பே நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். அவர் நடிப்பில் நாளை காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் இப்போது நடித்துள்ள புதிய விளம்பரம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

போன் பே நிறுவனத்தின் விளம்பரத்தில் சமந்தா இப்போது நடித்துள்ளார். ஏற்கனவே இந்த விளம்பரத்தில் அமீர் கான், ஆலியா பட், துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடித்துள்ள புதிய விளம்பரம் இப்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.