திரைப்பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமந்தாவுக்கு அழைப்பு!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படத்திற்கு தேசி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ரூ.375 கோடிக்கு மேல் வசூலீட்டியது.
அல்லு அர்ஜூன் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ,புஷ்பா படத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடியிருந்தார். இப்பாடல் சர்ச்சை ஆனாலும் சூப்பர் ஹிட் ஆனது.
இப்படத்தை அடுத்தும் விஜய்சேதுபதி – நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இந்திப் படங்களில் சமந்தா நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய திரைப்பட விழா வரும் ஆகஸ்மாதம் நடக்கவுள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக சமந்தா கலந்துகொள்கிறார்.இதனால் சமந்தா மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.