திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (19:31 IST)

விமான நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த சமந்தா... செம ட்ரெண்டிங் போட்டோ!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வருகிறார். நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, கார்டன் வைப்பது என தனக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது சமந்தா தான் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாவது சீசன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது மாஸ்க் அணிந்திருந்தும் அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்ட் செய்துள்ளனர் .