வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (11:51 IST)

இந்தா கொஞ்சம் அன்பு - அழகை இழந்த சமந்தா - ரசிகருக்கு பளார் பதில்!

தெலுங்கு இயக்குனர் குணசேகர் ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். இப்படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். 
 
இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரோமோஷன் விழாவில் சமந்தா அழுத விஷயம் சமூகவலைத்தளங்கள் முழுக்க பேசப்பட்டது. இந்நிலையில் நெட்டிசன்ஸ் ஒருவர் "சமந்தா இழந்துவிட்டார்"என பதிவிட்டிருந்தார். 
 
அந்த நபருக்கு பதிலளித்த சமந்தா, என்னை போல் தொடர்ந்து பல மாதங்கள் நீங்கள் சிகிச்சை, மருந்துகள் எடுக்காமல் இருக்கவேண்டும். அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு நேராமல் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். மேலும், நீங்க அழகாக ஜொலிக்க இதோ என் அன்பு கொஞ்சம்"என பளார் ரிப்ளை பாராட்டுக்களை பெற்றுள்ளார்.