வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (17:00 IST)

சுட்டு போட்டாலும் ஹிந்தி வராதோ... இங்லிஷில் அசத்திய சமந்தா!

நான் தென் இந்தியாவை சேர்ந்தவள், எனவே ஹிந்தி சரளமாக வராது எனவே ஹிந்தியில் பேசமாட்டேன் என கூறியுள்ளார் சமந்தா. 
 
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் திருமணத்திற்கு பின்னரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
 
அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இந்தியில் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார். 
 
அதன் பின்னர், எனக்கு இந்தி நன்றாக தெரியும். ஆனால், நான் தென் இந்தியாவை சேர்ந்தவள். அதனால் மொழி சரளமாக இருக்காது என்பதால் இந்தியில் பேச மாட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.