1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 18 ஏப்ரல் 2018 (16:16 IST)

2 ஆம் பாகத்தில் நடிக்க முடியாது: சமந்தா...

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் சமந்தா. திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சில படங்கள் வெளியாக காத்திருக்கிறது. 
 
முன்னதாக ராம் சரண் உடன் சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படம் ஹிட்டானது. இந்த அப்டத்தில் பணியாற்றியதை பற்றி சமந்தா கூறியதாவது, நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் கடும் வெயிலில், ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததுபோல் வேறு படத்திற்கு நடித்ததில்லை. 
 
சுடுமணலில் காலில் செருப்பு அணியாமல் பங்கேற்று நடித்தேன். படத்தின் வெற்றி, பட்ட கஷ்டங்களை மறக்க செய்துவிட்டது. படம் வெற்றி பெற்றதால் இதன் 2 ஆம் பாகம் உருவாக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டால் அதில் நான் நடிக்க மாட்டேன். 
 
காரணம் ரங்கஸ்தலம் எனக்கு ஒரு மேஜிக்காக அமைந்தது. மீண்டும் மீண்டும் அதை கொண்டு வர முடியாது என சமந்தா கூறியுள்ளார்.