வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (15:18 IST)

கீர்த்தி சுரேஷ், சமந்தா படத்தின் டீஸர் நாளை ரிலீஸ்!

கீர்த்தி சுரேஷ், சமந்தா நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.
 
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்தப் படத்தில், பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.
 
மேலும், நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் டீஸர், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை ரிலீஸ் ஆகிறது.