1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (14:24 IST)

விஜய் தேவரகொண்டா & சமந்தா நடிக்கும் குஷி படத்தின் அடுத்த அப்டேட்!

கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும், ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே தொடங்கிவிட்ட நிலையில் ஒரு விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சமந்தாவின் உடல்நலப் பிரச்சனைக் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சமந்தா உடல்நலம் சரியாகி மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்தார்.

இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.