வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:17 IST)

''புஷ்பா 2 ''படத்தில் சமந்தாவுக்குப் பதில் நடனமாடும் பிரபல நடிகை

புஷ்பா 2 வது பாகத்தில்  பிரபல  நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது.

உலகம் முழுவதும்  வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற புஷ்பா படத்தில்  2வது பாகம்  திரைப்படம்  பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தில் இல்லாத சில புதிய நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த  நிலையில், அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் சமந்தா  இப்படத்தில் முதல் பாகத்தில் ஆடியதைப் போன்று இப்படத்தில் ஆட மாட்டார் என தெரிகிறது.
sreeleela

எனவே  பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடல் முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் போன்ற ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.