பல நாட்களுக்கு பிறகு சமூகவலைத்தள பக்கம் வந்த சமந்தா - கட்டிப்பிடித்து தூங்கும் போட்டோ உள்ளே!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து திரைப்பிரபலங்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு சமூகவலைத்தளங்களில் 24 மணி நேரமும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். ஆனால், சமந்தா அந்த பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை.
இதனால் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் ஓய்வெடுத்து வருகிறார் என கோஷ்டியினரும், மற்றொரு பக்கம் சமந்தா வீட்டில் சொத்து தறாரு நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மச்சினனின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து கூறவில்லை என்றெல்லாம் ஆளாளுக்கு கொளுத்தி போட்டனர். ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தற்போது கூலாக தனது செல்ல பிராணி நாயை கட்டி அணைத்து தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை அலார்ட் செய்துள்ளார் சம்மு..