செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (09:17 IST)

அந்த நடிகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்... என் அப்பா, அம்மாவும் விரும்புவாங்க!

'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு அறிவித்ததில் இருந்தே நிவேதா சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது , படம் பார்ப்பது , தினம் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "தாராள பிரபு" படத்தை பார்த்துவிட்டு நடிகர் விவேக்கை பாராட்டியுள்ளார்.

அதில், "சின்ன வயசுல இருந்தே எனக்கும் என் குடும்பத்திற்கும் விவேக் சார்-னா ரொம்ப புடிக்கும். அவரது காமெடியில் சோஷியல் மெசேஜஸ் அதிகம் இருக்கும். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தை பார்த்து ரசித்தோம். சிறந்த நடிகர் என்பதை,  சமூக ஆர்வலரும் கூட. மரம் நடுதல் போன்ற நல்ல காரியங்கள் செய்து வருகிறார் என கூறி விவேக்கை வெகுவாக பாராட்டியுள்ளார் நிவேதா. இதோ அவர் பேசியுள்ள வீடியோ..