1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (08:56 IST)

"யூ ஆர் மை பேபி "... சாய்பல்லவி வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!

கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்சு புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் பிரேமம். இந்தப் படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் மலர் என்ற கதாப்பாத்திரம்  மூலம் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தவர்  தான் நடிகை சாய்பல்லவி.

அதையடுத்து NGK , தியா , மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை ரவுண்டு கட்டி வளைத்துவிட்டார். மேக்கப்பே போடாமல் இயறக்கை அழகை கொண்டு வசீகரிக்கும் சாய் பல்லவியை தன் படங்களில் ஒப்பந்தம் செய்ய பல இயக்குனரகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சாய்பல்லவி தனது அழகிய தங்கை பூஜா கண்ணன் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாவில் வாழ்த்துக்கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து பூஜாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.