1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:47 IST)

இணையத்தை கலக்கும் சமந்தாவின் வொர்க்-அவுட் புகைப்படங்கள்!

இணையத்தை கலக்கும் சமந்தாவின் வொர்க்-அவுட் புகைப்படங்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக கொரோனா விடுமுறையில் மொட்டைமாடியில் தோட்டம் வளர்த்து செடிகளை வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி யோகா, உடற்பயிற்சி ஆகியவையும் செய்து வந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அவர் வொர்க் அவுட் செய்யும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 33 வயதான சமந்தா இன்னும் முதல் படத்தில் நடித்த நடிகை போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கமெண்ட் அளித்து வருகின்றனர்
 
சமந்தா தற்போது ’தி பேமிலி மே’ என்ற வெப்தொடரில் நடித்து முடித்துள்ளார். முதன்முதலாக நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ள சமந்தாவுக்கும் இந்த வெப்தொடர் அனுபவம் புதுமையான இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அவர் விரைவில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது